பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி & 219

அப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டதையும், அவளும் அவனைக் காதலிப்பதையும், அவர்கள் ஒருவரை யொருவர் முதன் முதலாகக் கண்டு காதல் கொண்ட அன்றே, அத்தோழி அறிவாள். எனினும், அதை அப் பெண், தான்ே தன்பால் அறிவிப்பள் என எதிர் நோக்கி னாள். ஆனால், அவள் அதை அறிவித்திலள். பெற்ற தாயினும் பெரிதாகப் பேணிக் காக்கும் அவள் நாண், அவளை அது கூறாவாறு தடுத்துவிட்டது. பெண்ணுள்ளத் தின் பண்புணர்ந்த தோழி அதற்காக வருந்தினாளல்லள். மாறாக, அவள் காதலை வாழ்விக்கும் வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தாள். இடையே, தன்பால் வந்து குறைகூறி நிற்கும் இளைஞனின் தகுதிப்பாட்டினையும் ஆய்ந்து அறிந்து கொண்டு வந்தாள். இறுதியாக, அப் பெண், அவன்மீது பேரன்பு கொண்டுள்ளாள் என்பதை யும், அவ்விளைஞன், அவளை மணந்து கொள்ளற்காம் மாண்புடையனே என்பதையும் அறிந்து கொண்டாள். அதுகாறும் வாய் திறவாதிருந்தவள், அவற்றைத் தெளிவாக அறிந்துகொண்ட அன்று, அவனை அழைத்து, "நின்குறை யாது?’ என வினவி, "நின்னைத் தோழியாய்ப் பெற்ற பேறுடையளாய அப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டேன். அக்காதல் பயன் அளிக்க நின் துணை வேண்டி வந்துளேன்!” என அவன் கூறியதை ஏற்றுக் கொண்டு, அவர்கள் காதல் நிறைவேறத் துணை புரிவதாக வாக்களித்து அனுப்பினாள்.

அவனை அனுப்பிய பின்னர், அவள் அப் பெண்ணின்பாற் சென்றாள். சென்று, தன்னை விடாது தொடர்ந்து வரும் அவ்விளைஞன், தன்முகம் நோக்கித் தொழுது நிற்பதை விடுத்து, எவ்வளவு கூறினும், அவ்