பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பழந்தமிழ் நூல்களில் சிறப்புக்கும் பெருமைக்கும் உரியவை எட்டுத் தொகை நூல்களாகும். இவற்றில் கலித் தொகையும் ஒன்றாகும்.

சிறப்பு மிக்க கலித்தொகையோ குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐந்து,வகை நிலங்களுக்கு உரியதாக ஐந்து பிரிவுகளைக் கொண்டது. இந்த நூலில் நீங்கள் இலக்கிய விருந்துண்ணப் போவது, குறிஞ்சிக் கலியாகும்.

நம் தமிழக முன்னோர் தமிழ் நூல்களை அகம், புறம் என இரு பிரிவுகளாக வகுத்துள்ளனர். அகம் எனப்படு வது, கட்டினங் காதலர் இருவர் கருத்தொருமித்துக் கூடித் துய்த்த இன்பத்தை அது எத்தகையது என்று கூற இயலாமல், உள்ளத்துள்ளேயே எண்ணி மகிழ்வதாகும். ஆகவே, அகத்துக்குள்ளேயே அகமகிழும் இது அகமாகும்.

பிறரிடம் கூறி மகிழக் கூடியவற்றைக் கொண்டது புறம். அகத்தே நிகழுவதை அகம் என்றும், புறத்தே நிகழு வதைப் புறம் என்றும் நம் ஆன்றோர் பகுத்தனர். இன்பம் மட்டும்தான்ா, துன்பமும் தான்ே மனத்துள் வேதனையை உண்டாக்குகிறது. அப்படி இருக்க, இப் பாகுபாடு சரியாகுமோ என்று ஐயப்படுவோர் அன்றும் இருந்தனர். ஆகவே, காமத்தைச் சார்ந்து நிகழுமாயின் அதை அகம் என்றும், மற்றவற்றைப் புறும் - அகப்பொருள், புறப்பொருள் என்று கொள்ளலாம் என்றும் விதித்தனர்.