பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக நூல்களெல்லாம் காம வேட்கையினால் செய்யும் வெறிச்செயல்களைக் குறிப்பன என்று கொள்ளு தல் கூடாது. காதலன் காதலியிடையே தோன்றிய இணையிலா உள்ளன்பின் பெருக்கினால் நிகழும் தூய ஒருமைப்பாட்டின் சின்னமே அவை. 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை' என்று தொல்காப்பியனாரும், 'அன்பின் ஐந்திணை என்று இறையனாரும் கூறுவதை மனதில் கொள்ள வேண்டும். சாதாரண உடலின்பம் மட்டுமே விரும்பும் வேட்கையல்ல காதல். ஒருவர் மற்றொருவரின் இன்ப துன்பங்களைத் தமதாகக் கொண்டு, ஒருவரை ஒருவர் பிரியாது, ஒருயிரும் ஈருடலு மாய் இணைந்து வாழ்தலே காதலாகும். இவ் வொழுக்கைத்தைச் சிற்றின்பம் எனக் கூறாது, ஒத்த அன்பின் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்! எனக் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.

இத்தகைய காதல் நிலைப்பட்ட தலைவன் தலைவி யிடையே ஒழுகும் ஒழுக்கம் ஏழு வகைப்படும். அவற்றி னுள் புணர்தல் பற்றியதாக அமைந்துள்ளதே குறிஞ்சி. யாகும். பிற மற்றைய நிலங்களுக்கு உரியன. -

குறிஞ்சியில் நிகழும் ஒழுக்கத்தை-புணர்தலைமுதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பர். முதற் பொருள் என்பது ஐந்நிலத்துக்குரிய பொருளைக் குறிப்பதாகும். குறிஞ்சி நிலத்துக்குப் பெரும் பொழுது கூதிரும் முன் பணியும், சிறுபொழுது யாமமுமாகும்.

கருப்பொருள் என்பது அந்த அந்த நிலங்களுக்குரிய தெய்வம், மக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், செய்தி ஆகியவை.