பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிப்பொருள் என்பது-உரிய பொருள் என்பதாகும். குறிஞ்சிக்கு உரியன புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகும். இப்படி முதல், கரு, உரிப் பொருள்கள் மூன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் சிறந்து விளங்குவதை அகப்பொருள் தமிழ் நூல்களில் காணலாம்.

ஒத்த அன்புடைய காதலரிடையே புணர்ச்சி நிகழுமுன் தலைமக்கள் பக்கம் நிகழும் காட்சி, ஐயம், தெரிதல், தேறல் இவற்றைக் கைக்கிளை என்பர். இப்படி விரிவாகப் பகுத்துள்ள அகப்பொருள் இலக்கணத்தைக் கூறும் கலித்தொகையுள் கபிலர் ஆக்கிய செந்தமிழ் நூல் குறிஞ்சிக் கலியாகும்.

கலிப்பாவினால் அழகுற அமைத்த குறிஞ்சிக் குமரியை நீங்கள் படித்து, ரசித்து, மகிழ இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

அன்பன், பதிப்பகத்தார்

சென்னை