பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை கிடைச்சங்க நூல்களின் வரிசையில் ஒன்ருகிது. எட்டுத் தொகையில் உள்ள நூல்களின் பெயரைத் தெரி விக்கும் பாட்டு ஒன்று உண்டு. நற்றிணே நல்ல குறுக்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறம்என்று இத்திறத்த எட்டுத் தொகை. இந்தப் பாட்டில் உள்ள வரிசை, பாட்டின் அமைப்பில் தானகவே அமைந்ததேயன்றிக் குறிப்பிட்ட காரணம். எதனையும் உட்கொண்ட தன்று. இந்த எட்டு நூல்களிலும், புறப் பொருளேக் கூறும் நூல்கள் பதிற்றுப் பத்து, புற, தானுாறு என்ற இரண்டும் ஆகும். அகப் பொருளைக் கூறுவன நற்றினே, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித் தொகை, அகநானுாறு என்பன. அகப்பொருள், புறப் பொருள் என்ற இரண்டுக்கும் உரிய பாடல்கள் பரிபாட லில் உள்ளன. - அகப்பொருட் பாடல்கள் உள்ள ஐந்து நூல்களில் ஐங்குறு நூறு, கலித்தொகை என்ற இரண்டு நூல்களிலும் ஒவ்வொரு திணையை ஒவ்வொரு புலவர் பாடியிருக்கிரு.ர். ஆகவே ஐந்து ஐந்து புலவர்கள் இயற்றிய பாடல்களை அவற்றில் காணலாம். மற்ற மூன்று நூல்களில் பல கவிஞர் கள் இயற்றிய பாடல்கள் உள்ளன. தனித் தனியாக உள்ள பாடல்களைத் திரட்டி அடியளவை நோக்கி அப் பாடல்களை, மூன்று தொகுதியாகப் பழங்காலத்தினர் தொகுத்தார்கள். நாலடி முதல் எட்டடி வரையில் உள்ள பாடல்களைத் தொகுத் துக் குறுந்தொகை என்றும், ஒன்பது அடி முதல் பன்னிரண்டு, அடி வரை உள்ளவற்றைத் தொகுத்து நற்றிணை என்றும், பன்னிரண்டு அடிக்கு மேற்பட்ட பாடல்களைத் தொகுத்து .