பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii குறிஞ்சித் தேன் அகநானூறு என்றும் பெயரிட்டார்கள்: இந்த மூன்று நூல்களில் குறுகிய அடியளவுடையதாகையால் குறுந் தொகை என்ற பெயர் ஒரு தொகை நூலுக்கு அமைந்தது. பல அடிகள் உள்ள பாடல்கள் அமைந்த அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்றும் ஒரு பெயர் உண்டு. எட்டுத் தொகை நூல்களைத் தொகுக்கும் போது முதல் முதலில் புலவர்கள் குறுந்தொகையைத்தான் தொகுத் திருக்க வேண்டும் என்று மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிரு.ர்கள். பத்துப் பாட்டு என்னும் தொகையில் முதலில் திருமுருகாற்றுப்படை அமைந்திருக் கிறது. அது முருகக் கடவுளைப் பற்றியது, எட்டுத் தொகையில் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகை. இதில் உள்ள கடவுள் வணக்கம் முருகனைப் பற்றியது. ஐந்து வகைத் திணைகளுள் முதல் திணை குறிஞ்சி. அத்திணைக் குரிய நிலம் மலையும் மலையைச் சார்த்ததுமாகிய பகுதி. அதற்குத் தெய்வம் முருகன். நூல் வரிசையின் முதலில் முதல் நிலத்தின் தெய்வத்தை வணங்குவது பொருத்த மன்ருே? இந்தப் புத்தகத்தில் குறுந்தொகையிலிருந்து எடுத்த ஏழு பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து ஒன்று. இது குறுந்தொகைக்குப் புறத்துறுப்பாய்ப் புறப்பொருட் பகுதி பாகிய பாடாண் திணையைச் சார்ந்த கடவுள் வாழ்த்து என்னும் துறையில் அமைந்தது. ஏனைய ஆறு பாடல்கள் அகப் பொருள் துறைகள் அமைந்தவை. வேறு நூல்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் மிகுதியாக இந்த நூற் பாடல்களை மேற்கோளாக எடுத்து ஆண்டிருக்கிருர்கள், ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தருமியின் பொருட்டுப் பாடியதாகச் சொல்லும் கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாட்டு, இந்தத் தொகை நூலின் இரண்டாவது பாட்டாகக் கோக்கப்