பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை iii பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் கீழும் அந்தப் பாட்டுக்குரிய துறையும், அதைப் பாடிய புலவர் பெயரும் அமைந்திருக்கும், இந்தப் பாட்டின் கீழ் இதைப் பாடிய வரின் பெயர் இறையனுர்’ என்று உள்ளது. மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதரை இறையனர் என்று வழங்கும் வழக்கம் உண்டு. அப்பெருமான் அறுபது சூத்திரங்களால் இயற்றியருளிய களவியலுக்கு இறையனர் அகப்பொருள் என்ற பெயர் வழங்குவதிலிருந்து இதை உணரலாம். - இந்தப் பாட்டு எழுந்த வரலாற்றையும் இதளுேடு தொடர்புடைய செய்திகளையும் தேவாரம், கல்லாடம், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், கடம்பவன புராணம், பரஞ்சோதி முனிவ்ர் திருவிளையாடற் புராணம், சீகாளத்திப் புராணம், தமிழ் விடு தூது, மதுரைக் கோவை முதலிய பல் நூல்கள் விரிவாகவும் சுருக்கமாகவும் தெரிவிக் கின்றன. - நன்பாட்டுப் புலவளுய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக் கருளி ளுேன்காண் என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடுகிரு.ர். 事 குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து இப்புத்தகத்தில் இருக்கிறது. அந்நூலின் முதற் பாட்டு, திப்புத்தோளார் என்பவர் பாடியது. - - தலைவன், தலைவியை முதலில் கண்டு காதல் கொண்டு அவளை அணுகி அவளும் தன்பால் காதல் கொண்டதை அறிந்து அவளோடு அளவளாவி மகிழ்கிருன். பின்பு யாரும் அறியாமல் அடுத்தடுத்து அவ்விருவரும் சந்திக்கிருர்கள். தலைவிக்கு உயிர்த்தோழி இருப்பதைத் தலைவன் உணர்ந்து, அவள் வாயிலாகத் தலைவியைச் சந்தித்தால் அடிக்கடி வந்து பழக எளிதாக இருக்கும் என்று எண்ணுகிருன். ஒரு நாள்