பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 குறிஞ்சித் தேன் - கண்டு உயிர்க் கூட்டங்களின் அகமும் முகமும் மலர் கின்றன. அதற்கு அடையாளம் போலத் தாமரை மலர் மலர்கின்றது. தண்மையும் மென்மையும் நிற மும் வடிவும் பொலிவும் மணமும் உடைய தாமரை, கானும் கண்ணுக்கு எழிலேயும் தொடும் கரத்துக்கு மென்மையையும் மோக்கும் நாசிக்கு மனத்தையும் வழங்குகிறது. நம்முடைய பெரியோர்கள் தாமரையைக் கண்டும் தொட்டும் மோந்தும் அழகு பார்த்தார்கள். உயர்ந்த பொருளுக்குத் தாமரையை அடையாளமாக்கிஞர்கள். தொட்டால் உதிரும் இதழையுடைய ரோஜாப் பூ இன்று பூவுலகத்தில் தலேமை வகிக்கிறது. மரத்துப் போன மூக்குக்கு ரோஜாப் பூவின் மணந்தான் தெரி கிறதே பன்றித் தாமரையின் மென்மணம் தெரிவ தில்லை. தாமரையின் நிறமும் மணமும் அளவு கட வாமல், நுண்ணிய உணர்ச்சியுடையாருக்கு இன்பம் தருவனவாக இருக்கின்றன. ரோஜாப்பூ இன்று வந்தது. எந்தக் காலத்திலும் ராஜாப் பூவாக இருப் பது தாமரை. தாமரையைத் தெய்விகத் தன்மை உடையதாக முன்னேர்கள் போற்றி வந்தார்கள். திருமகளும் கலேமகளும் நான்முகனும் தாமரையிலே எழுந்தருளியிருக்கிருர்கள். இறைவனே அன்பர் களின் உள்ளமாகிய கமலத்தில் வீற்றிருக்கிருன். இவ் வளவு சிறப்பைத் தாமரைக்குக் கொடுப்பதோடு நின்றுவிடவில்லே. நமக்குப் பற்றுக்கோடாக இருக் கும் இறைவனுடைய பாதத்துக்குத் தாமரையை உவமை கூறினர்கள். திருவடிகளேயே தாமரையாக உருவகம் செய்தார்கள். பாதாரவிந்தம், அடிக் கமலம்,