பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவலங் கொடியோன் 3 தாள் தாமரை என்றெல்லாம் போற்றினர்கள். கரு ணேத் தேன் பில்கும் கமல அடியுடையான் இறைவன் என்று எண்ணி எண்ணி இன்புற்ருர்க்ள். இதோ ஒரு நல்லிசைச் சான்ருேர் முருகனே நமக்குக் காட்டுகிறர். பாரதம் பாடிய பெருந்தேவ ஞர் என்னும் பெயருடைய அப் பெரியார் கடவுளேப் பாடுவதில் திறமை பெற்றவர். திருமாலேயும், முரு கனேயும், சிவபிரானேயும் பாடியிருக்கிருர். நற்றிணை யில் வரும் கடவுள் வாழ்த்தைப் பாடினவர் அவரே. அங்கே வேத முதல்வனுடைய விசுவ ரூபத்தைக் காட்டிய அவர் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில் சேவலங் கொடியோனுகிய முருகனுடைய திருக் கோல எழிலேக் காட்டுகிருர். வேத முதல்வனுடைய சேவடியை முதலிலே காட்டிப் பின் ஏனேய அங்க விரிவைக் காட்டியதுபோல, இங்கும் முருகனுடைய சேவடியை முதலிலே காட்டிப் பின்பு ஏனையவற்றைத் தரிசனம் செய்யச் செய்கிருர். சேவடி என்ருலே தாமரை தானே உவமையாக முன்வந்து நிற்கிறது? ஆதலின் தாமரையை முன் வைத்துப் பாட்டைத் தொடங்குகிருர். முருகனுடைய சேவடி அழகு பொலிவது; சிவந்த நிறமுடையது. ஆதலின் சேவடி என்று சொல்லு கிருேம். செம்மை, இலக்கணங்களெல்லாம் நிரம்பிய தற்கு அறிகுறி; நேர்மைக்கு அடையாளம்; நிறைவுக் குரியது; உயர்வைக் குறிப்பது; வளப்பத்தைப் புலப் படுத்துவது; நன்மையைக் காட்டுவது. நேராக