பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. அடிக்கடி மழை பெய்கிறது. கார்காலம் வந்துவிட்டது. அதன் விளைவாக அந்தப் பருவத்திலே மலரும் மலர் கள் வளம்பெற்று மலர்கின்றன. கடம்ப மரம் மலர்ந்து நிற்கிறது. முல்லே பூத்துச் சொரிகிறது. சரம் சர மாகக் கொன்றை மலர் பூத்துத் தொங்குகிறது. அவர்களுடைய வீடு முல்லே நிலத்திலே அமைந் திருக்கிறது. அடர்ந்து மரங்கள் வளர்ந்த இடம் அது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லே நில மென்று சொல்வார்கள் தமிழர்கள். முல்லே நிலம் கார்காலத்தில் மிகச் செழிப்பாக இருக்கும். மழை பெய்யப் பெய்ய மண் வளம்பெறும்; காடு கவின் பெறும்; மரம் செடி கொடிகள் மலர்ந்து மாண்புபெறும். காதலனும் காதலியும் மணந்து இல்வாழ்வை நடத்தி வந்தார்கள். கடமையை நினைந்து காதலன் வேற்றுார் சென்றன்; 'நான் விரைவில் இவந்துவிடு வேன்? என்று சொல்லிப் பிரிந்து சென்ருன். எப் பொழுது வருவீர்கள்? விரைவு என்பது ஒரு கணத்தை யும் குறிக்கலாம்; ஒரு மாதத்தையும் குறிக்கலாம்?? என்று கேட்டாள் தலைவி. 'கார் காலம் வரும்போது நானும் வந்துவிடுவேன். மாரி வளம் சுரக்கும் காலத் தில் என் முயற்சியும் பழுத்துச் செல்வத்தைத் தர,நான் அதைப் பெற்று வருவேன்?’ என்ருன் அவன். அவன் சொல் திறம்பாத சான்றேன் ஆதலின் காதலி அவன்