பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குறிஞ்சித் தேன் தயையை முன்னிட்டேனும் என்னேப் பாதுகாக்க வேண்டும், அதுவும் இல்லையானல் அவர் ஆண்மை யுடையவர் என்பதையாவது நிலை நாட்டட்டும். தம் பொருளே வேறு ஒருவர் கைப்பற்ற, அதனே மீட்டும் பெற வழியில்லாத கோழை என்ற பழியை மேற்கொள் ளாமல் தம் வீரத்தையாவது காப்பாற்றிக் கொள்ளட் டும். இதை அநுமனே, நான் வேண்டினேன் என்று விண்ணப்பம் செய்வாயாக99 என்று சொல்கிருள். ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்ததோர் தாரக் தான்அல ளேனும், தயாஎனும் ஈரக் தான் அகத்து இல்லையென் ருலும், தன் வீரம். காத்தலை வேண்டென்று வேண்டுவாய். அன்பையும் அருளேயும் சுட்டிப் பேசுகிருள் சீதை. முன்பு உள்ளது குறுந்தொகையில் இருபதாவது பாடல். இதைப் பாடியவர் கோப்பெருஞ் சோழன் என்னும் அரசன்.