பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் அன்பும் 67 துறை: செலவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி 翌-6〉男#録選l - பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் செல்ல எண்ணுகிறனென்று அவனது பயணத்தைத் தெரி வித்த தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது? என்பது இதன் பொருள். - அன்பையும் அருளேயும் விட்ட பின்புதான் தலைவன் தன்சீனப் பிரிய முடியும் என்று தலைவி கூறு கிருள். இங்கே, சீதையின் கூற்ருகக் கம்பர் பாடும் பாடல் ஒன்று நினேவுக்கு வருகிறது. சீதை அசோக வனத்தில் துயரமே வடிவாக இருந்தபோது அநுமன் வந்து இராமன் திருநாமத் தைச் சொல்லி அவளேக் காண்கிருன். சீதை தன் உள்ளத்தில் பொங்கி வரும் துயரத்தையெல்லாம் வெளிப்படுத்துகிருள்; பல பல சொல்கிருள். எஇராமபிரான் என்னே உலகறிய மனேவியாக ஏற்றுக்கொண்டார். நான் இட்ட மணமாலேயை அவர் தம் திரு மார்பில் ஏற்றுக்கொண்டார். அந்த ஆரம் தாழும் திரு மார்பையுடைய பிரானுக்கு இப்போது என்னிடம் பழைய அன்பு இருக்கிறதோ, இல்லையோ யான் அறியேன். அன்பு இருந்தால் என்னே அவர் காப்பாற்ற வேண்டும். தம்மோடு தொடர்புடைய தாரம் என்ற நினைவை அவர் இப்போது ஒருகால் மறந்திருக்கலாம். நான் அவருக்கு ஏற்ற தாரம் அல்ல ளென்று எண்ணலாம். அதல்ை அவருக்கு என்னிடம் அன்பு இல்லாமல் இருக்கலாம். அது போகட்டும். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டும் கருணை யுடையவர் அவர்; அருளாளர்; தயாநிதி; அந்தத்