பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

菇6 குறிஞ்சித் தேன் யவரென்று நான் கருதுகிறேன். அவர் மனம் உரமுடையது; வன்மையை உடையது; இரக்கம் இல்லாத வன்மையை உடையது. அவர் அருளே நீக்கும் மனவுரம் பெற்றவர்; துணையைத் துறக் கும் உரவோர். அவரை அறிவுடையவர் என் கிருய். இத்தகைய மன வன்மை பெற்ற உரவோர், அறிவு படைத்த உரவோரானுல் அப்படியே உரவோராகட்டும். நாம் அறிவில்லாதவர்களா கவே இருப்போம்; மடமையுடையோராக இருப் போம். மடந்தையே, நாம் மடம் உடையவர் களாகவே இருப்போமாக லாப நஷ்டம் தெரியாத மடமையுடையோராக இருப்போம்; அவர் அறி வடையவராகவே இருக்கட்டும்! தலேவியின் உள்ளத்திலே தோன்றிய வருத்தம் இவ்வாறு பொங்கி வருகிறது. அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின், உரவோன் உரவோர் ஆக: மடிவம் ஆக, மடந்தை, காலே! * மடந்தையே, (தம்மோடு தொடர்பு இல்லாதவர் களிடத்தும் செல்லும்) அருளையும், (தொடர்புடையவர் கள்பாற் செல்லும்) அன்பையும் போக்கி, தம் வாழ்க்கைத் துணைவியையும் விட்டுப் பொருளின் பொருட்டுப் பிரிந்து செல்பவர் அறிவுடையவரானல், (அந்த) மன் வன்மை உடை யவர் அறிவுடையவராகவே இருக்கட்டும்! நாம் அறி யாமையை உடையவர்களாகவே இருப்போமாக! பொருள் வயின் பொருளை ஈட்டும் பொருட்டு, உரவோர் - அறிவுடையவர், ஆற்றல் உடையவர். மடவம் - மடமையை உடையோம். * -