பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.-- அருளும் அன்பும் 5筑 தலை வி : என்னேத் துணைவி என்று எண்ணுமற் போன லும் போகட்டும். தம்மை அண்டி வாழ்பவள் என்ற அன்பு இல்லாமற் போனலும் போகட்டும். நான் ஒரு மெல்லியல். பெண்ணென்ருல் பேயும் இரங்கும் என் பார்கள். அவருடைய பிரிவால் நான் எத்தனே துன்பத்தை அடைவேன் என் பதை அவர் அறிய மாட்டாரா? ஒரு பெண் துன் பப்படும்படி செய்வது நல்லதா? எல்லோரிடத். தும் இரக்கம் உண்டாக்கும் பண்பை அருள் என்று சொல்வார்கள். அந்த அருளேயும் அவர் இழந்து விட்டுப் புறப்படப் போகிருரா? தோழி : இது என்ன? மேலும் மேலும் அடுக்குகிறயே! தலைவி வேறு உயிருக்குத் துன்பம் உண்டானல் தோ தலை இரங்கும் அருள் தன்மைதான் அறிவுடைமைக்குப் பயன். அறிவின்ை ஆகுவ துண்டோ பிறிதின் நோய், தம்நோய்போற் போற்ருக் கடை’’’ என்பது எவ்வளவு உண்மை! நான் உலகில் வாழும் ஒர் உயிர். அவர் பிரிவால் நான் நொந்து போவேன். என் துன்பத்தை நினைத்து இரக்கம் கொள்வதுதான் அறிவுக்கு அடையாளம். என் துன்பத்துக்கு இரங்காமல் இருப்பது அறிவாகுமா? ழி : அவர் இரக்கமற்றவர் என்ரு சொல்கிருய்? வி : அன்போடும் அருளோடும் வாராத பொருளே அறிவுடையவர் விரும்பமாட்டார்களாம். ஆனல் நம் தலைவரோ அன்பையும் அருளேயும் நீக்கி விட்டுத் துணைவியைத் துறந்து பொருளுக்காகப் பிரியப் போகிறர். நீ அவரை அறிவுடையவர், உரவோர் என்று சொல்கிருய். அவர் உரவோ ராகவே இருக்கட்டும். அவர் வன்கண்மை உடை