பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 குறிஞ்சித் தேன் பொருளேத் தேடிச் செல்லப் போகிருர் என்று சொல்கிருய். தோழி : அவர் ஒன்றையும் இழக்கவில்லையே! தலைவி ஆக்கத்தைக் கருதி முதலே இழக்கும் வியா பாரத்தை அறிவுடையோர் மேற்கொள்ளமாட் டார்கள். தோழி : ஆக்கம் எது? முதல் எது? தலைவி அவர் என்னே வாழ்க்கைத் துணைவியாக ஏற் றுக் கொண்டிருக்கிருர். நான் அவரைத் துணேவ ராகப் பெற்றிருக்கிறேன். நான் எப்போதும் பிரிய வொண்ணுத துணைவி என்ற உண்மையை மறந்து என்னேத் துறந்து செல்லப் போகிருர். உண்மையை மறப்பது ஒரு நஷ்டம் அல்லவா? தோழி ; உன் பெருமையை அவர் மறந்தா செல் கிருர்? தலைவி சற்றுப் பொறு; முழுமையும் கேள். நான் அவருக்குத் துணைவியென்பதை அவர் மறந்து போவது கிடக்கட்டும். எனக்கு அவரே உயிர். அவரால் புரக்கப்படும் நிலையில் நான் இருக்கி றேன். தொடர்புடையவர்களிடத்தும் தம்மால் புரக்கப்படுபவர்களிடத்தும் இருக்கும் ஒட்டுணர்ச் சியை அன்பு என்று சொல்வார்கள். இதுகாறும் தலைவருக்கு என்னிடம் அன்பு இருந்தது என்று நினைத்தேன். அந்த அன்பை அவர் நீக்கிவிட் டால்தான் என்னேப் பிரிவதற்கு மனம் வரும். அன்பை இழந்து விடுவது லாபமா, நஷ்டமா? தோழி : அவர் அன்பு அவ்வளவு எளிதில் நீங்கி விடுவதா?