பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் 6露 முல்லே நிலத்தில் இருக்கும் இந்தக் காதலரின் வீட்டுக்கு எதிரே அழகிய காடு ஒன்று இருக்கிறது. கொன்றை மரங்கள் பல அக் கானத்தில் இருக்கின் றன. வேறு மரங்கள் சில இருந்தாலும் மிகுதியாகக் கொன்றையே இருந்தமையால் அங்குள்ளவர்கள் அதைக் கொன்றைக் கானம் என்று வழங்குவார்கள். இப் போது அந்தக் கொன்றைக் கானம் மலர்ந்து விளங்கு. கிறது. மஞ்சள் நிறம் பெற்ற கொன்றை மலர்களே நெடுந்துாரத்திலிருந்து பார்த்தால் எத்தனே அழகாகக் காட்சி அளிக்கின்றன! கதிரவனுடைய கதிர், அந்த மலர்த்தொகுதியின்மேல் வீசும்பொழுது பொன்னேப் போலப் பளபளக்கின்றன. செறிந்து தழைத்து நிற். கும் கொன்றை மரங்கள் அழகிய பெண்களேப்போல நிற்கின்றன. குறைவின்றி வாழும் பெண்களின் உடம்பு வளப்பமும் வனப்பும் பெற்று விளங்குவது போல அவை தோன்றுகின்றன. தலைநிறையக் கரு. கருவென்று செறிந்து அடர்ந்த கூந்தலேயுடைய மட மகளைப்போல ஒவ்வொரு மரமும் இருக்கிறது. கரும் பச்சை நிறமுடைய தழைகள் அடர்ந்து செறிந்து மரத்தின் வளப்பத்தைக் காட்டுகின்றன. அவற்றின் ஊடே பொன்னிற மலர்கள் திகழ்கின்றன. கூந்தலி னிடையே பொன்னரி மாலே முதலிய அணிகளே மகளிர் புனேந்துகொள்வது உண்டு. கருங்கூந்தலி. னிடையே அவை மின்னும். அப்படி இந்தத் தழைச் செறிவினுண்டே கொன்றை மலர்கள் மின்னுகின்றன. மலர் மலர்ந்தால் வண்டுகள் வந்து அவற்றை மொய்ப் பது இயற்கை அல்லவா? பொன்னிறம் பெற்ற அம் மலர்களில் நீலமணி வண்டுகள் வந்து படுகின்றன;