பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*62 குறிஞ்சித் தேன் மொய்க்கின்றன. கொன்றைப் பூ நீண்ட கொத்தாகப் பூக்கும். கொடிபோல நீண்ட இணரை (பூங்கொத்தை) உடையது கொன்றை மரம். வண்டு படும் படியாகத் ததைந்து (செறிந்து) மலர்ந்த கொடியினர்கள் அவை. அவை இடையிடையே தழைச் செறிவினுாடே தோன்றுகின்றன. பொன்ற்ை செய்த அலங்காரமான இழைகளைக் கட்டிய மகளிரின் கூந்தலேப்போல அந்தக் காட்சி இருக்கிறது. மகளிர் கதுப்பைப் (கூந்த ஆலப்) போலத் தழைச் செறிவும், இழையைப் போலக் கொன்றையின் பூவும் தோன்றுகின்றன. காதலிக்கு ஒர் உயிர்த் தோழி உண்டு. காதலி 'யின் இன்ப துன்பங்களைத் தன்னுடையனவாகவே உணருகிறவள் அவள். கார் காலம் வந்தால் காதலர் வருவாரோ, வரமாட்டாரோ என்ற ஐயம் காதலிக்கு உண்டாவதற்குமுன் அவளுக்கு உண்டாகிவிடும். கார்காலம் வந்துவிடுமே! ஒருகால் அவர் வராவிட் டால் நம்முடைய தோழிக்குத் துன்பம் உண்டாகுமே! அவருடைய பிரிவில்ை உண்டாகும் வருத்தத்தை ஆற்றும் வகை யாது?’ என்று அவள் அஞ்சுவாள். கார்காலம் வருவதற்கு முன்பே கவலேகொள்ளும் அவளுக்கு, வந்த பிறகு உண்டாகும் கலக் கத்தைக் கேட்க வேண்டுமா? அழகிய மகளிரைப் போலப் பூத்து நிற்கும் கொன்றைக் கானத்தைப் பார்க்கிருள். அந்த மலர்கள் அவள் கண்களே உறுத்துகின்றன. மழை பெய்து நிலம் குளிர, எங்கும் தண்மை நிலவுகிறது. அதைக் கண்ட அவ ளுக்கோ உள்ளம் குமுறி வெம்புகிறது. வீட்டுக்கு முன்னலே தோன்றும் கொன்றைக்கானம், தன் மலர்