பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் 63 களைக் காட்டி, "இதோ கார்காலம் வந்துவிட்டது; கார்காலம் வந்துவிட்டது?’ என்று பேசாத பேச்சிளுல் சொல்வது போல இருக்கிறது. இன்னும் அவர் வர வில்லையே!?? என்று பரிகசிப்பது போலக் கூடத் தோன்றுகிறது. அந்தக் கானத்தைப் பார்க்கும் போதெல்லாம் தோழி பெருமூச்சு விடுகிறள், ஏங்கு கிருள்; உள்ளம் சாம்புகிருள். இவ்வளவும் தலே வி மனம் குழைவாளே என்ற நினைப்பிலே எழுபவை. 米 தன் தோழி வாசலிற் போய் எதிர் தோன்றும் கொன்றைக் கானத்தைப் பார்க்கும் போதெல்லாம் நெடு மூச்செறிவதைத் தலேவி கவனித்தாள். கார்ப் பருவம் வந்து விட்டதே என்பதை எண்ணி அவள் கவலைப்படுவதாகத் தெரிந்தது. தலைவனுடைய பிரிவு தலைவிக்குத் துன்பத்தை உண்டாக்கியது உண் ைமயே. ஆல்ை இல்வாழ்வில் ஆடவர்கள் தம் கட மையை நிறைவேற்ற வேற்றுார் செல்வது அவசியம் என்பதை அவள் உணர்ந்தவளாதலின் ஒருவாறு அந்தத் துன்பத்தை அடக்கி வைத்திருந்தாள். இருப்பினும் துன்பம் மிகுதியாகும் பொழுது அவளேயும் அறியாது வெளிப்படும். அப்பொழுதெல்லாம் தோழி அவளுக்கு ஆறுதல் சொல்வாள். இதோ இன்னும் சில நாட்களில் கார் காலம் வந்துவிடும். அப்போது அவர் வந்து விடுவார்?’ என்று சொல்லித் தேற்றி வந்தாள். கார்காலம் வரும் வரைக்கும், கார்காலம் இன்னும் வரவில்லை; வந்தால் அவர் உடனே வந்து விடுவார்?’ என்று ஆறுதல் கூறினவள். கார்காலம் கு,-6