பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குறிஞ்சித் தேன் வந்துவிட்ட பிறகு என்ன சொல்லி ஆற்றுவது? இதனுல்தான் தோழி கவலைப்படுகிருள் என்பதைக் குறிப்பால் உணர்ந்து கொண்டாள் தலைவி. ஆற்றிலே படகில் ஏறிப் போகிருேம். படகு வன்மையுடையதென்ற உறுதி இல்லே. காற்றும் வீசு கிறது, ஆற்றைக் கடக்குமட்டும், படகைச் செலுத்த வேண்டுமே என்ற கவலே இருக்கும். கரையை எப். போது அடைவோம் என்ற ஏக்கம் உண்டாகும். கரை யைப் படகு அடைந்தவுடன் படகிலிருந்து இறங்க வேண்டியதுதான். படகிலிருந்து இறங்க வேண் டுமே!’ என்று கவலைப்படலாமா? நிச்சயமாக இறங்கி விடலாம். அதில் ஒன்றும் இடையூறு இல்லை. தலைவி கரையை அடைந்த படகில் இருப்பவளேப் போல இருந்தாள். கார்காலம் வருமட்டும் தலைவனது பிரிவில்ை மிக்க துன்பத்தை அடைந்திருந்தாள். ஆனல் கார்காலம் வந்துவிட்ட தென்று உணர்ந்த வுடன் அவர் வந்துவிடுவார் என்ற உறுதியினல் அவள் துன்பம் நீங்கியிருந்தாள். தோழியோ, இது காறும் கார்ப் பருவம் வரும் வரும், அவர் வருவா ரென்று ஆறுதல் சொன்னேன். இனி என்ன சொல் வேன்!’ என்று அஞ்சிள்ை. - தலைவி அவள் நிலையை ஊகித்து உணர்ந்தாள். தோழியை அனுகினள். தான் கவலைப்படவில்லை என் பதைப் புலப்படுத்தத் தொடங்கிள்ை. தோழி, கார்காலம் வந்துவிட்டதென்று நீ அஞ்சுகிருய் போல் இருக்கிறது?’ என்ருள். தோழி தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, அப்படி ஒன்றும் இல்லையே?’ என்ருள்.