பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் - 65 தலைவி : இதோ நம் வீட்டுக்கு முன்னலே உள்ள கொன்றைக் கானத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடுகிருயே! தோழி , அதன் அழகைப் பார்த்து மகிழ்ந்தேன். தலைவி ஆம்; அழகாகவே இருக்கிறது. மரத்தில் மலர் மலர்ந்தால் எப்படியோ இந்த வண்டு களுக்குத் தெரிந்து விடுகிறது. அவை மலர்களைத் தேடி வந்து வீழ்கின்றன. வண்டுகள் வீழும்படி ததைந்து மலர்ந்த கொடியினர்களே இடையிலே பெற்றுத் தழைச் செறிவோடு கொன்றை மரங்கள் தோன்றுகின்றன. நானும் அவற்றின் அழகில் ஈடுபடுகிறேன். கொன்றைக் கானம் பொன்ற்ை செய்த புனேயிழையைக் கட்டிய மகளிரின் கதுப்பை (கூந்தலே)ப் போலத் தோன்றுகின்றது. இப்போதுதான் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. புதுப் பூங்கொன்றை இது. இந்தக் கொன்றைக் கானத்தைக் கண்டு நீ கவல்கின்ருய். தோழி : நீ எவ்வாறு.....? தலைவி : நான் உன் பார்வையையும் நெடுமூச்சையும் கவனித்துத்தான் சொல்கிறேன். இந்தக் கொன் றைக் கானம் இப்போது கார்காலம் வந்துவிட்ட தென்று உனக்குக் கூறுகின்றது. நீ அதை மெய் யென்று நம்புகிருய், ஆல்ை நான் நம்பவில்லை. கொன்றைக் கானம் இது கார்காலம் என்று கூறி னும் யானே தேறேன். புதுப் பூங்கொன்றையாத லால் இன்னும் கார்காலம் வந்து கொலு விற்றி - ருக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கொன்றை கூறுவதைத் தேருததற்குக் காரணம்