பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 குறிஞ்சித் தேன் என் காதலர் கூறியதைத் தேறியதுதான். ஆம்; அவர் கார்காலத்தில் வந்துவிடுகிறேன் என்ருர், அவர் பொய் வழங்காத மெய்ம்மையாளர். தலை போனலும் பொய் வழங்கலர். அவர் சொன்னது தவறது. ஆறறிவும் அன்பும் உயர் பண்பும் வாய்ந்த அவர் கூறியதைத் தெளிவேஞ? இந்தக் கொன்றை மரம் சொல்வதைத் தெளிவேஞ? அவர் வராமல் இருப்பதல்ை இன்னும் கார் காலம் வந்து நிலைகொள்ளவில்லே என்றுதான் கொள் கிறேன். அவர் வார்த்தையை உறுதியாக நம் புகிறவள் நான். ஆகவே இந்தப் புதுப் பூங் கொன்றைக் கானம் கார் எனக் கூறினும் யான் தேறேன். பழம் பெருங் காதலர் கூறியதையே தேறியிருக்கிறேன். - தோழிக்கு உண்டான வியப்புக்கு எல்லேயில்லே. எநாம் இவளேத் தேற்றுவது போய் இவளல்லவா நம் மைத் தேற்றுகிருள்? தன் காதலரிடத்தில் இவளுக்கு இருக்கும் அன்பும் நம்பிக்கையும் எவ்வளவு சிறந் தவை அவை வாழ்க! இக் காதலர் வாழ்க: என்று அவள் வாழ்த்துகிருள். தலைவி கூறியது வருமாறு : வண்டுபடத் ததைந்த கொடிஇணர் இடையிடுபு பொன் செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானம் கார் எனக் கூறினும், யானே தேறேன்; அவர் பொய்வழங் கலரே. * வண்டுகள் (வந்து) வீழும்படியாகச் செறிந்து மலர்ந்த நீண்ட பூங்கொத்துகளை நடுநடுவே பெற்று, பொன்ற்ை செய்த அலங்கரிப்பதற்ருரிய அணிகளைக் கட்டிய மன்ற