பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொன்றைக் கானம் - 37 ருடைய கூந்தலைப் போலத் தோன்றும் புதிய பூவையுடைய கொன்றை மரங்கள் அடர்ந்த காடு, (இப்போது வந்தது) கார் காலம்’ என்று புலப்படுத்தினாலும், நான் அதை (ஒப்புக் கொண்டு) தெளிய மாட்டேன்; (ஏனெனின்) என் காதலர் பொய்யைச் சொல்ல மாட்டார். படுதல்-மொய்த்தல். ததைந்த-செறிந்த மலர்ந்த, இங்கே இரண்டு பொருளையும் கொள்வது சிறப்பு. கொடி-நீட்சி. இணர்-பூங்கொத்து, இடையிடுபு-இடையிட்டு; நடுவிலே இட்டு. புனே- அலங்கரிக்கும். இழை-ஆபரணம். கதுப் பின் - கூந்தலைப்போல, தேறேன் - தெளியமாட்டேன். அவர்-காதலர், வழங்கலர்- சொல்லமாட்டார், * - துறை : பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, அவர் வரக் குறித்த பருவ வரவின்கண், இனி ஆற்றுவிக்கு மாறு எவ்வாறு!" என்று தன்னுள்ளே கவன்ருட்கு: அவளது குறிப்பறிந்த தலைமகள், கானம், அவர் வருங் காலத்தைக் காட்டிற்ருயினும், யான் இது கார்காலம் என்று தேறேன், அவர் பொய் கூருராதலின்” எனத் தான் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. . (வருந்துணையும்-வருமட்டும். ஆற்றுவித்த- ஆறுதல் செய்த. கவன்ருட்கு - கவலைப்பட்டவளுக்கு. ஆற்றுவல் ஆற்றியிருப்பேன். என்பது பட - என்னும் கருத்துத் தோன்ற) . கொன்றை மகளிரைப் போலத் தோற்றினும் மகளிர் அல்லவென்று தெளிவதுபோல, இது கார்ப் பருவமென்று தோற்றினும் அன்றென்று தெளிந்தேன் என்றபடி என்று இப்பாட்டின் உரையில் மகாமகேய பாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் நயம் காட்டியிருக் கிருர்கள். - குறுந்தொகையில் இருபத்தோராவது பாடல் இது. இந்தப் பாடலப் பாடியவர் ஓதல் ஆந்தையார் என்னும் புலவர். ---