பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல் மகள் குறத்தி வந்துவிட்டாள். நரைத்த மயிர்; பழுத்த உடல், சங்குமணி மாலே அணிந்த கழுத்து ஆகியவற்றேடு அவள் குறி பார்த்துச் சொல்வதற்காக வந்திருக்கிருள். அவள் கையில் ஒரு முறமும் ஒரு கோலும் உள்ளன. அவளோடு தலைவியைப் பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயும் பேசுகிருர்கள். செவிலி : ஏ குறத்தி, நீ குறி பார்த்துச் சொல் வாயா? குறத்தி : அதுதானே என் தொழில்? செவிலி : என்ன என்ன குறி பார்த்துச் சொல்வாய்? குறத்தி : நோய் நொடிக்குக் காரணத்தைச் சொல் வேன். தெய்வத்துக்கு அபசாரம் செய்து அதல்ை கெடுதல் வந்திருக்கலாம். அதை ஆராய்ந்து எந்தத் தெய்வக் குற்றமென்று சொல்வேன். உடம்பிலுள்ள குறி, முகத்திலுள்ள குறி, கையி லுள்ள ரேகை இவற்றைப் பார்த்துப் பலன் சொல்வேன். உங்களுக்கு எத்தகைய குறி வேண்டும்? - "செவிலி : எங்கள் பெண்ணுக்குச் சில கால்மாக உடம்பு சரியில்லே. இளேத்து வருகிறது. என்ன நோயென்று தெரியவில்லை. அதற்குரிய காரணத் தைத் தெரிந்துகொள்ள வேண்டும். f