பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவல் மகள் 69 தோழியும் தலைவியும் உள்ளே மிக மெல்லிய குரலில் பேசிக்கொள்கிருர்கள். தலைவி : கேட்டாயா உன் தாய் சொல்வதை? எனக்கு ஏதோ நோய் வந்து விட்டதாமே! தோழி : உன் நோய் இன்னதென்று அவர்கள் தெரிந்து கொள்ள இயலாமல் தடுமாறுகிருர்கள். இந்தக் கிழக் குறத்தி கண்டு சொல்லப் போகிருளோ! *。 தலைவி: தோழி, ஏதாவது விபரீதம் நேர்த்துவிடப் போகிறது. இவள் என் மெலிவுக்குரிய காரணத் தைத் தெளிந்து சொல்வாளா? தோழி: பார்க்கலாமே, இவள் என்ன செய்யப் போகிரு ளென்று. நமக்குத் தெரியாமலா போகப் போகிறது? * - வெளியே நற்ருய் குறத்தியிடம் பேசுகிருள். கற்ருய்: இப்போது நீ எந்த மாதிரி குறி பார்க்கப் போகிருய்? - குறத்தி : கட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். கற்ருய்: அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறத்தி: சாமிக்குப் பூசை போட்டுவிட்டுப் பாட்டுப் பாடுவேன். இதோ என் முறம் இருக்கிறதே, இதில் நெல்லே வைத்துக் குறி பார்ப்பேன். நெற் குறி பார்ப்பதைத்தான் கட்டுப் பார்ப்பது என்று. சொல்வ்ார்கள். உங்களுக்குத் தெரியாதா? எனக் குக் கட்டுவிச்சி என்ற பேர் வழங்குவதை நீங்கள் கேட்டதில்லையோ? - கற்ருய் : இதைப் போன்ற துன்பம் இதுவரையில் எங்களுக்கு வந்ததில்லை. நோய் வந்தால்தானே