பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 குறிஞ்சித் தேன் புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழிஅவர் சென்ற காட்டே? (தோழியே, ஆம்பல் மலரின் வாடலைப் போன்ற குவிந்த சிறகையுடைய, வீட்டில் வசிக்கும் குருவிகள் முற்றத் தில் உலரும் தானியத்தை உண்டு, பொதுவிடத்தில் சாணத் தினது நுட்பமான பொடியைக் குடைந்து விளையாடி, இல்லில் உள்ள இறைப்பிலுள்ள இடத்தில் தம் பிள்ளை களோடு தங்கும், துன்பத்தைத் தரும் மாலே நேரமும் தனி மையும் தலைவர் சென்ற நாட்டில் இல்லையோ? சாம்பல்-வாடற் ஆ. கூம்பிய சிறகர்-மூடிய சிறகை யுடைய மனை-வீடு. குரீஇ-குருவி, முன்றில்-முற்றம். உணங்கல்-உலரும் பொருள்; தினே, கம்பு, நெல் முதலிய தானியங்கள். மாந்தி-உண்டு. மன்றம்-பொது இடம். எரு-உலர்ந்த சாணம். நுண் தாது-நுண்ணிய பொடி, குடைவன-கொத்துவனவாகி; முற்றெச்சம். ஆடி-விளை யாடி இல் இறை-வீட்டின் இறைவானம். வதியும்- தங்கும். புன்கண்-துன்பம். புலம்பு-தனிமை. அவர்-தலைவர்.) துறை : பிரிவிடை ஆற்ருள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. 'தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் அந்தப் பிரி வுத் துன்பத்தைத் தலைவி தாங்கமாட்டாள் என்று கவலேயுற்ற தோழிக்கு, தலைவி, யான் ஆற்றுவேன் என்ற கருத்துப் புலப்படச் சொன்னது? என்பது. இத்துறையின் விளக்கம். . . . அவுர் போன இடத்தில் குருவிகள் இல்லிறப் பில் தங்கும் மாலேயும் தனிமையும் இல்லையோ?? என்று கேட்பது போலப் பாட்டு இருந்தாலும், அங்கே அவை இருக்குமாதலின் தலைவர் அவற்றை உணர்ந்து விரைவில் இங்கே வர வேண்டும் என்று நினைப்பார் என்ற குறிப்பை அது வெளிப்படுத்தியது. இதனைப் பாடியவர் மாமலாடன் என்னும் புலவர். து குறுந்தொகையில் 46-ஆவது பாட்டு,