பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 குறிஞ்சித் தேன் தோழி : அவர் பிரியும் போதே இப்படியெல்லாம் வரும் என்று நினைத்தேன். அவரது பிரிவைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உனக்கு இல்லை என்பதை நான்அறிவேன்.அவரைப்போகவேண்டாம்என்று சொல்வதற்கு உரிமையோ, ஆற்றலோ எனக்கு இல்லே. இந்த நிலையில் நான் என் செய்வேன்; தலைவி : நான் வருந்துவதாக எண்ணிக்கொண்டு நீ ஏன் துன்புறுகிருய்? நான்அன்று நன்ருகத்தெரிந்து கொண்டுதானே அவருக்கு விடை கொடுத்தேன்? தோழி : என்ன தெரிந்து கொண்டு விடை கொடுத் தாய்? தலைவி : அவர் என்னிடம் பேரன்புடையவர். போன இடத்தில் தம் காரியம் கைகூடினுல் உடனே ஒரு கணமும் தாழ்க்காமல் வந்து விடுவார் என்பதை நான் அறிவேன். தோழி : உண்மையாகவே நீ இப்படி நினத்தால் நல் லதுதான். அவருடைய பிரிவால் இவள் துன்புறு கிருளே.என்று நான் கவலேப் படாமல் இருப்பேன், தலைவி : நீ வீணுகக் கவலை கொண்டு பயன் என்ன? அவர் அன்பை நான் அறியமாட்டேன? ஆடவரு டைய கடமையை நாம் மறக்கலாமா? இப்போது வேறு ஒரு நிகழ்ச்சியும் என் ஆறுதல் அதிக மாக்குகிறது. * . . . தோழி : என்ன நிகழ்ச்சி? தலைவி : மாலே நேரம் வரப் போகிறது. இந்தக் குருவி கள் இல்லின் இறைப்பிலே உள்ள தம் வீட்டிலே பிள்ளேயோடு வதியப்போகின்றன. இந்தக் குரு விக் குடும்பம் இந்த ஊரில இருப்பது மாத்திரம் அன்று. உலகம் முழுவதுமே ம்னிதர்களோடு குரு