பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி #29 அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற் காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் பேர், இணைந்தது.

"நீங்கள் எதற்கு அழுகிறீர்கள்? அரிச்சந்திரனுடைய தலை முறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடியவரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக்கொண்டு கம்ம் இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போ தெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப்பற்றிய உண்மையோ, அவர்களுக்குக் கோபம் தான் வருகிறது' என்று அவளிடம் கூறினான் அரவிந்தன், அடித்தவர் நின்று கொண்டிருக்கு வில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்றுவிட்டார். இது; சில விநாடிகளே ஆரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள் நீர் கிழிய எய்த வடுப்போல் ஆ நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள்.

பூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த முகத்தைக் கழுவிச் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்தபோதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்து விட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும் போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது.

அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந் தீர்கள். இன்று எனக்காத நாதுரிதமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினர்கள்! இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தர இருக்கிறேனோ இந்தப் பாவி?’ என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள்.

இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் டைரியில் அரவிந்தன் கீழ்க்கண்டவாறு எழுதினான்:

கு.ம - 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/131&oldid=555855" இலிருந்து மீள்விக்கப்பட்டது