பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 குறிஞ்சிமலர் தம் புத்தகங்களில் வரிக்குவரி எழுதியிருக்கிறார். நீங்கள் அந்தப் புத்தகங்களைக் கொண்டே அவரை அறமின்றி, ஒழுங்கின்றி, நியாயமின்றி ஏமாற்றினர்களே! இவ்வளவு காலம் ஏமாற்றியது போதாதா என்று அரவிந்தன் கூறிக் கொண்டே வந்த போது அவன் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. அவனுக்குச் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அவனுடைய இளமைத் துடிப்பு மிகுந்த உரமான கைகள் அந்தக் கொடியவனைக் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கும். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுக்கப் பூரணி ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு

விட்டாள்.

10

உடல்குழைய என்பெலாம் நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே ஓர் உறவும் உன்னியுன்னிப் படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற.

- தாயுமானவர் இயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது இலேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. ரோஜாப் பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு; ஆனால் முரட்டுத் தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடை யாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்து விடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது. -

அன்று தன் வீட்டில் புது மண்டபத்து முரட்டு மனிதனிடம் அரவிந்தன் வாங்கிய அறை தன் முகத்திலேயே விழுந்தது போல் உணர்ந்து, வெதும்பித் துடித்தாள் பூரணி. விழிகளில் நீரரும்பித் துக்கம் ஊற்றெடுத்துவர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி நின்றாள் அவள். காந்தத்தில் இணையும் ஊசி போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/130&oldid=555854" இலிருந்து மீள்விக்கப்பட்டது