பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 143

என்னென்னவோ எழுதி இருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்? இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை."

'நெருப்பில்லாமல் புகையுமா? யார் இந்த அரவிந்தன்? அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் பழக்கம்? எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்?"

"அவர் ஒர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும், அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன்; பழகுகிறேன், இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது."

'மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறுவிதமாகத்தான் சொல்லும்."

இதற்குமேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள். -

'வா பூரணி இன்றைக்கு உன் பேச்சு பிரமாதம்ாக இருந்ததென்று இப்போது தான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே? நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்...' என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.

'என்னவோ போலிருக்கிறாயே! உடம்புக்கு என்ன? முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா?' என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேஸ்வரி அம்மாள். மெளனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/145&oldid=555869" இலிருந்து மீள்விக்கப்பட்டது