பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 43 அடைந்த புகழைப் போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமை அல்லவா அது? நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவளித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே! என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன் பிறப்புகளையும் வாழவைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக் கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன் அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும் போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின. -

'அக்கா இனி மேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா? அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.

'இல்லை, கண்ணே அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்' என்று சொல்லி குழந்தையை வாரி அனைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மனத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும் போதும், சின்னஞ் சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும் போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோவிலிலிருந்து வீடு திரும்பு கிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்துரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோவிலில் முருகனையும் வணங்கி விட்டு ஏழு, ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் உறக்கம் வந்துவிடுமென்று கோதுமைத் தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாகச் சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/45&oldid=555769" இலிருந்து மீள்விக்கப்பட்டது