பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 10

74. அடலும் மடலும்

“எவ்வளவு சொன்னலும் கேட்க மறுக்கிருளே! நெஞ்சு இரங்கவில்லையே! இதற்கு என்ன செய்வேன். அவள்தான் அப்படி என்றால் அவளது தோழியும் அதற்குமேல் இருக்கிருள். அவளிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? இணங்கும்படி செய்யக் கூடாதா ?”

“இதற்கு வேறு வழிதான் என்ன ? வழி ஒன்றே. மடல் ஏறுவதுதான். பனங் கருக்கினலே குதிரை செய்து மாலை அணிந்து, மணி பூட்டி, அதன்மீது ஏறி வெட்கத்தை விட்டு எல் லாரும் எள்ளி நகைக்க வருவதுதான் !”

விழுத் தலைப் பெண்ணே விளையல் மா மடல் மணி அணி பெருங் தார் மரபிற் பூட்டி, வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, தெருவின் இயலவும் தருவது கொல்லோகலிழ் கவின் அசைகடைப் பேதை மெலிந்திலள் ; நாம் விடற்கு அமைந்த துதே ?

-மடல் பாடிய மாதங்கீரன்

75. நேரமும் ஆயிற்று, நாய்களும் இளைத்தன

செல்வக் குடும்பத்தில் பிறந்த பெண் ஒருத்தி. பருவம் வரப் பெற்றவள். கண்டவர் காமுறும் காரிகை. அருவிக் கரை யிலே ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்கிருள் தன் தோழி யுடன்.

அங்கே வந்தான் ஒர் இளைஞன்; மலேகாட்டுச் செல்வன். அவளேக் கண்டான். காதல் கொண்டான். அவளும் அவன் மீது காதல் கொண்டாள். இருவரும் இன்பப் பொழுது போக் கினர். இன்பம் 1 இன்பம் 1 இன்பம் ! அந்த இன்பத்திலே பொழுது போனதுகூடத் தெரியவில்லே. பொழுது மங்கியது.