பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் I 17

காரணம் யார் ? அவர்தான். மொட்டாக இருக்கும் மலரை எப் படித் தும்பி அலராக்கிவிடுகிறதோ அப்படிச் செய்து, விட்டார். முகராத முல்லேயாகிய என்னே முகர்ந்து, என் அகம் மலரச் செய்து, ஊரார் வம்பு பேச இடமும் தந்து விட்டார்.’

தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே; விடும் நாண் உண்டோ? - தோழி ! - விடர் முகைச் சிலம்புடன் கமழும் அலங்கு குலேக் காந்தள் நறுங் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்துாழ் வேலிய மலைகிழவோற்கே.

-ஆசிரியன் பெருங்கண்ணன்

|

90. தாயின் அணப்பும் தோகையின் தவிப்பும்

இரவு நேரம். எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கின்ற னர். வருகிருன் அவன். தன் காதலியைத் தேடி. யானே வரு வது போல வருகிருன். வந்து என்ன செய்கிருன் ? கதவைத் தட்டுகிருன் மெதுவாக.

கேட்டாள் அவள். ‘உம்’ என்று குரல் கொடுத்தாள். குரல் கேட்டாள் தாய்.

“என்னடி முனகுகிறாய் ?’ என்று சொல்லி இறுகக் கட்டி அணேத்தபடியே அயர்ந்தாள்.

பாவம் என்ன செய்வாள் அந்தப் பெண் வெளியிலே காத லன் வந்து காத்திருக்கிருன். உள்ளே இருக்கிருள் அவள். விழித் திருக்கிருள். ஆனல் வெளியே செல்ல முடியவில்லை. தாயின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிருள். எப்படி வெளியே செல்ல முடியும்?

வலையிலே அகப்பட்ட மயில் என்ன செய்யும்? கொண்டை யையும் தோகையையும் முறுக்கிக்கொண்டு கிடக்கும். அந்த மாதிரி கிடந்தாள் அவள்.

வெளியே காத்திருந்தவன் என்ன செய்தான். நீண்ட நேரம் காத்திருந்து பார்த்தான். பேர்வழி வெளியே வரக் காணுேம்.