பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 121

எனது காதலனேக் கண்ட உடனே காதல் என்ன செய் கிறது ? முகிழ்த்து எழுகிறது. இன்பம் தருகிறது. அவன் போன உடன் அது போகிறதா ? இல்லை. இருக்கிறது. இருந்து என்னைத் துன்புறுத்துகிறது” என்று சொல்கிருள் அந்தக் காதலி.

வேறாம் முதலும் கோடும் ஒராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின் ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம் , அகலினும் அகலாதாகி இகலும் - தோழி! - நம் காமத்துப் பகையே.

-உறையூர்ச் சிறுகந்தன்

95. இர க சி யம் அம் பல மாயிற் று!

கட்டும் காவலும் அதிகமாயின. வீட்டை விட்டு வெளி வர முடியவில்லை. காதலனே கினைத்து கினைத்து வருந்தினுள் அவள்.

கண்டாள் தோழி. சென்றாள் தாயிடம். அவளது காதலை மெதுவாக அறிவித்தாள். பிறகு அவளிடம் வந்தாள்.

  • சொல்லி விட்டேன்’ என்றாள் தோழி.

“யாரிடத்தில் சொன்னுய்?’ என்று கேட்டாள் அவள்.

‘அம்மாவிடம் சொன்னேன்’’

“என்ன சொன்னுய் ?”

‘அன்று நடந்ததைச் சொன்னேன்’’

என்ன அது ?”

‘உன் காதலன் வந்தானே அது’

“ஏனடி சென்னுய் ?”

‘பொய் சொல்லி மறைப்பதாலே என்ன பயன் ? அதனல் சொன்னேன்’’

போடி ! உன்னே என்ன செய்ய?’’

“என்ன வேண்டுமானல் செய்? என்ன வேண்டுமானலும் எண்ணிக் கொள். நான் உனக்கு நல்லதுதான் செய்தேன்.”