பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கா ட் சி க ள் 16

ஏன் p

“அவனுக்குப் பெண் கொடுக்க உன் பெற்றாேர் சம்மதிக்க வில்லே’’

‘அப்படியா ?”

“ஆம்.” ‘அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலே மறவர் வை வார் வாளி விறற் பகை பேணுர், மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர் நனங் தலை, நல்ல கூறி, புணர்ந்து உடன் போதல் பொருள்’ என, உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.

-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்

140. கனி உண்டவளும் காதல் கொண்டவளும்

குறுநில மன்னன் ஒருவன். பெயர் நன்னன் என்பது. அவனுக்கு உரிய மாந்தோப்பு ஒன்று. அத்தோப்பிலே மா மரங் கள் பல. இனிய சுவை தரும் மா. ஒருநாள் மாங்கனி ஒன்று நீரிலே மிதந்து வந்தது. அந்த சமயத்திலே அங்கே நீராடிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். மாங்கனியைக் கண்டதும் அதன் மீது ஆசையுண்டாயிற்று அவளுக்கு. அந்தப் பழத்தைத் தின்று விட்டாள்.

கன்னனின் ஆட்கள் இதை அறிந்தார்கள். அந்தப் பெண் ணேக் கொண்டு போனர்கள். நன்னன் முன்னே நிறுத்தினர்கள். அவளேக் கொன்று பேர்டும்படி உத்தரவு பிறப்பித்தான் நன்னன். அந்தப் பெண்ணின் தந்தை அறிந்தார் இதை, ஒடி வந்தார். ‘பெண்ணின் நிறையுள்ள பொன் பாவையும் எண்பது யானே களும் அபராதமாகக் கட்டுகிறேன். பெண்ணேக் கொல்லாதே’ என்றார். நன்னன் கேட்கவில்லே. கொலே செய்யச் சொன்னன். ‘பெண் பாவம் பொல்லாது. நன்னனைப் போலத் தன் பெண்ணே உயிரோடு கொல்கிருள் தாய்’ என்றாள் தோழி.