பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 1.65

பாலை என்பது என்ன ?

பழந் தமிழ்ப் பெருமக்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பிரித் தார்கள் அல்லவா ? அந்தப் பிரிவில் ஒன்றுதான் பாலே என்பது.

பாலே என்பது ஒரு தனி கிலம் அன்று. இயற்கையின் சீற் றத்தினலே உருக்குலேயப் பெற்ற கிலமே பாலே. மலைப்பாங்கான பகுதிகள் பாலே நிலமாதலும் உண்டு. காட்டுப் பகுதிகள் பாலே கிலமாதலும் உண்டு !

பாலே நிலத்திலே வாழும் உயர் குடிமக்கள் எவ்வாறு அழைக் கப் பெறுவர்? ஆண்கள் விடலை, காளே என்று அழைக்கப் பெறு வர். பெண்களுக்கு எயிற்றி, மீளி என்று பெயர். மற்ற குடிப் பிறந்தோருள் ஆண்களுக்கு எயினர் என்றும் மறவர் என்றும் பெயர் ; பெண்களுக்கு மறத்தியர் என்றும் எயிற்றியர் என்றும் பெயர்.

புரு, பருந்து, கழுகு-இவை பாலே நிலத்துப் பறவைகள். செங்காய்தான் பாலை கிலத்திலே காணப்படும் விலங்கு, இந் நிலத்து மக்கள் வாழ்ந்த குடியிருப்புகளுக்குக் குறும்பு என்று பெயர். நீர் வற்றிய குழிகளையும் கிணறுகளையும் இங்கே காணலாம்.

குராம் பூ, மராம் பூ-இவையே இக்கிலத்துப் பூக்கள். உழிஞை, பாலே, ஒமை, இருப்பை முதலியன. இங்கே காணப்படும் மரங்கள்.

போர் செய்தல், பகற் சூரையாடல், வழிப்பறி, திருட்டுஇவையே இக் கில மக்களின் தொழில். இத் தொழில் செய்து பெற்றதைக் கொண்டு உண்டு உயிர் வாழ்வர்.

இந் நில மக்களின் இசைக் கருவிகள் இரண்டு. ஒன்று : யாழ். மற்றாென்று : பறை, யாழுக்குப் பாலேயாம் என்று பெயர். பறைக்கு, துடி என்று பெயர். இவர்தம் இசை: பஞ்சுரம்.

பாலே நிலத்தின் தெய்வம் கன்னி. அதாவது துர்க்கை,