பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கு று ங் .ெ த ைக க்

148. கட்டும் வெட்டும்

பருவம் வந்த பெண் அவள். கண்கள் காலா பக்கமும் சுழல்வது இயற்கைதானே !! கண்கள் சுழன்றன. அந்தச் சுழலில் சிக்கினன் அவன். இருவரும் இன்பமாக இருந்தனர். இது எவருக்கும் தெரியாது.

‘என்னுேடு வருகிருயா?’ என்று கேட்டான் அவன்

‘வருகிறேன்” என்றாள் அவள்.

  • frt h($uir ?”

“இரவு’

“நான் வரட்டுமா ?”

வர’’

  • எங்கே வந்து கிற்க ?”

‘கொல்லப்புறத்திலே. வேலிக்கு அருகே. வெளியிலே’

    • H

அமாவாசை இருட்டு. கன்னங் கரிய இருள். நடு சிசி. அவன் வந்தான். வேலிக்கு வெளியே உடம்பைப் போர்த்தி மூடி நின்றான்.

வீட்டுக்குள்ளே படுத்திருந்தாள் அவள். அவள் அருகே செவிலித் தாயும் படுத்திருந்தாள். இருவரும் ஒரே படுக்கையில் தான் படுப்பது வழக்கம். குழந்தை முதல் அவளேக் கட்டி அணேத்த வண்ணம் படுத்துத் துளங்குவாள் செவிலி. அன்றும் அதே மாதிரி படுத்திருந்தாள்.

இது பெரிய சிறையாயிற்றே! இதிலிருந்து தப்புவது எப்படி? யோசித்துக் கொண்டே படுத்திருந்தாள் அந்தக் கள்ளி.

‘உஸ்’ என்று சொல்லிப் புரண்டு படுத்தாள். செவிலித் தாய் தன்னை அணைத்திருந்தாளே அந்தக் கையை எடுத்து அப்பால் போட்டாள்.

என் னடி. ஏன் ?’ என்று கேட்டாள் செவிலி.

வேர்க்கிறது” என்றாள். -

பாவம் ! அப்பாவி! செவிலித் தாய் ! மெய்தான் போலும் என்று நினைத்தாள். அயர்ந்து குறட்டை விட்டுத் துரங்கினுள்.