பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 203

‘அவரோ, பொருள் தேடிப் போயிருக்கிறார். நானே தூங் காமல் துடிக்கிறேன். மெலிந்து வாடுகிறேன். ஐயோ! பாவம் என்று எண்ணுமல் இரக்கமின்றி மேலும் இடிக்கிறதே தோழி!” என்று அலறிள்ை.

அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலே வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே ! யானே, தோடு ஆர் எல் வளே ஞெகிழ, நாளும், பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே ; ‘அன்னள் அளியள்’ என்னது, மா மழை இன்னும் பெய்யும்; முழங்கி மின்னும் - தோழி! - என் இன் உயிர் குறித்தே.

-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்

191. வேழம் நோக்கிளுள் வேதனை போக்கிள்ை !

“வருந்தாதே. வந்துவிடுவார். அதோ பார். அந்த யானைகளே ! இவ்வளவு நேரம் அந்தக் குளத்திலே துழாவிக் கொண்டிருந்தன. சூரியன் மலே வாயில் வீழ்ந்து விட்டான். அந்த யானைகளும் ஆணும் பெண்ணுமாகப் படுத்துவிட்டன; ஒன்றை மற்றாென்று தழுவதல் காண்! அதோ அந்த மலேச்சாரலில் இனி அந்தப் புலி என்ன செய்யும்? தாக்குமா? இதே மாதிரி உன் காதலன் வருவார். உன்னைத் தழுவுவார். ஊராரின் ஏச்சுப் பேச் சிலிருந்து உன்னேக் காப்பார். வருந்தாதே !’ என்றாள் தோழி.

படரும் பைபயப் பெயரும்; சுடரும் என்றுழ் மா மலை மறையும் ; இன்று அவர் வருவர்கொல், வாழி- தோழி! - நீர் இல் வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானே குறும் பொறை மருங்கின் அமர் துணை தழlஇக் கொடு வரி இரும் புலி காக்கும் நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.

-மதுரை அளக்கர் ஞாழார் மகளுர் மள்ளனர்