பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 289

முல்லை என்பது என்ன ?

காடும், காடு சூழ்ந்த நிலமும் முல்லே எனப்படும். இடை நிலம் என்றும் சிலர் சொல்வர். அதாவது குறிஞ்சிக்கும் மருதத் துக்கும் இடையே உள்ள நிலம்,

முல்லை நிலத்தின் கடவுள் திருமால். மக்களிலே செல்வ ருக்கு என்ன பெயர் ? குறும்பொறை ந | ட ன், தோன்றல் என்பன ஆண்களின் பெயர். மனேவி, கிழத்தி என்பன பெண் களுக்குரிய பெயர். ஏழை ம க்க ளே எவ்வாறு அழைப்பர் ? இடையர், ஆயர் என்பர். இது ஆண்களுக்கு. பெண்கள் எவ்வாறு அழைக்கப் பெறுவர்? இடைச்சியர் என்றும் ஆய்ச்சியர் என்றும் அழைக்கப் பெறுவர்.

இங்கே காணப்படும் பறவை காட்டுக் கோழி. மானும், முயலுமே விலங்குகள். ஊர்களுக்கு, பாடி என்று பெயர். குறுஞ் சுனே, கான்யாறு - இவையே நீர் கிலேகள். கொன்றை, காயா, குருந்தம், - இவை மரங்கள். குல்லேப் பூ, முல்லேப்.யூ, தோன்றிப் பூ, பிடவம் பூ - இவை மலர்கள். வரகு, சாமை முதிரை முதலியன உணவு தானியங்கள்.

முல்லை நில மக்களின் இசைக் கருவிகள் இரண்டு. ஒன்று : யாழ் மற்றாென்று : பறை.

யாழுக்கு முல்லே யாழ் என்று பெயர். பறைக்கு ஏறங் கோட் பறை என்று பெயர். அவர்கள் பாடிய பண், சாதாரி.

அவர்களது தொழில் என்ன ? சாமை, வரகு முதலியன விதைத்தல் ; களே கட்டல் : அரிதல்; கடா விடுதல்; ஆடு மாடு மேய்த்தல்.

முல்லை நில மக்களின் விளையாட்டும் பொழுது போக்கும் எவை ?

கொன்றையில்ை குழல் செய்து ஊதுவது: குரவைக் கூத் தாடுவது காட்டாற்று நீரிலே விளையாடுவது; ஏறு தழுவல் முதலியன.