பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 255

கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன கார் எதிர் புறவினதுவே - உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் வரைகோள் அறியாச் சொன்றி, கிரை கோற் குறுங்தொடி தங்தை ஊரே.

-பேயன்

361. இடையன் வரவும் இன்ப நினைவும்

கார் காலம். மாலை நேரம். மேய்ச்சல் நிலத்திலிருந்து பால் கொண்டு வருகிருன் இடையன். பாலே வீட்டிலே கொடுத்து விட்டுச் சோறு கொண்டு செல்கிருன். பனையோலேயாலே செய்த பாயையும் எடுத்துச் செல்கிருன். தலையிலே முல்லை சூடியிருக் கிருன். கண்டாள் அவள். காதலன் நினைவு வந்தது.

‘பாரடி, இன்னும் அவர் வரவில்லை” என்று ஏங்குகிருள் அவள். அவரோ வாரார் - முல்லேயும் பூத்தன; பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய, பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் குடிய எல்லாம் சிறு பசு முகையே.

-உறையூர் முதுகொற்றன்

| 268. In T வங் த து ம ன ள ன் வர வில் லை

கார் காலம் வந்து விட்டது, வரகுக் கொல்லேயிலே முல்லே அரும்பி விட்டது. வண்டுகள் ரீங்காரம் செய்கின்றன. மாலேயும் வந்து விட்டது. ஆனல் அவளேப் பிரிந்த காதலன் வரவில்லை.

“பாரடி தோழி, இன்னும் வரவில்லேயே அவர்’ என்று புலம்புகிருள் அவள்.