பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 கு று ங் தொ ைக க்

பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் வண்டு சூழ் மாலேயும், வாரார்; கண்டிசின் . தோழி! - பொருட் பிரிந்தோரே.

ஒக்கூர் மாசாத்தி

363. காகம் கரைந்தது; காதலன் வந்தான்!

காகம் கரைந்தது. “சரி, இன்று வந்து விடுவார் உன் காதலர்’ என்றாள் தோழி. காதலன் வந்து விடுவான் என்ற துணிவுண்டாயிற்று அவ ளுக்கு. மனம் கலங்காதிருந்தாள். காதலன் வந்தான். காதலிக்கு ஆறுதல் கூறிவந்ததற்காகத் தோழியைப் பாராட்டினன்.

அப்போது தோழி சொல்கிருள். - ‘ஆறுதல் அளித்தவள் நான? அல்ல; அல்ல. அந்தக் காகம் அல்லவா? அதற்கு எவ்வளவு சோறு போட்டாலும் தகும்’ என்றாள்.

நள்ளி என்றாெரு வள்ளல். அவன காட்டிலே பசுக்கள் ஏரா ளம். அந்தப் பசுவின் நெய்யும், தொண்டியிலே விளைந்த அரிசி யும் கலந்து ஏழு பாத்திரங்களில் ஏந்திக் கொடுத்தாலும் போதாது” என்றாள் தோழி. திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயங்த நெய்யின், தொண்டி முழுதுடன் விளைந்த வெண் ணல் வெஞ் சோறு எழு கலத்து ஏந்தினும் சிறிது - என் தோழி பெருங் தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

-காக்கை பாடினியார் கச்செள்ளையார்