பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 279

‘எவர் ? உங்கள் நண்பரா ? இருக்கிறார். சந்தோஷமாக இருக்கிறார்!’

எங்கே ???

“இங்கே யில்லை’

“இங்கே யில்லேயா ? பின் எங்கே ?”

“விளையாடுகிறார்’

“விளையாடுகிருரா ? என்ன விளையாட்டு ?”

‘விலைமாதர் விளையாட்டு’

“அப்படியா ?”

“ஆமாம். அவர் விளையாடும் நீர்த்துறை அழகாயிருக்கிறது. மருத மரம் மலர்ந்து மணம் வீசுகிறது. ஆனல் அவரை மணந்த எனது தோள் நாளுக்கு நாள் வாடுகிறது; இளைத்துப் போகி றது. தனிமையில் தவிக்கிறேன்’ என்றாள். தனது கோபத்தைக் கொட்டினள்.

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்த் துறை அணிந்தன்று; அவர் ஊரே ; இறை இறந்து இலங்கு வளைநெகிழ, சாஅய்ப் புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

-குன்றியஞர்

291. கரும்பும் காதலும்

பாணன் என்று ஒருவன். அவனுக்கு வேலே என்ன தெரி யுமா ? பாட்டுப் பாடுவது. ஆடல் மகளிர்களிடத்திலே அவனுக் குத் தொடர்பு உண்டு. அந்தக் காலத்திலே வாழ்ந்த பணக்காரர் களை ஆடல் மகளிரிடம் சேர்ப்பது. ஆடல் மகளிர் வீட்டிலிருந்து மறுபடியும் வீட்டில் கொண்டு சேர்ப்பது. இதுவே தொழில்.

பெரிய பணக்காரன் ஒருவன் ஆடல் மகளிர் வீட்டிலே தங்கி விட்டான். அவனது மனைவி கோபித்துக் கொண்டிருக்கிருள். மெதுவாக அவளை சமாதானம் செய்ய கினைத்து வருகிருன் பாணன். வழியிலே தோழி எதிர்ப்படுகிருள்.