பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 307

மாதிரி எனக்குப் பசலை படர்ந்திருக்கிறது. அவர் வந்து அனேத் தால் அது நீங்குகிறது. அவர் விட்டால் அது மீண்டும் படர் கிறது. நான் என்ன செய்வேன் 1’ என்றாள் அவள். ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை - காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

-பரணர்

328. இடித்தாள் ; மகிழ்ந்தான் !

மலே காட்டுப் பெண் ஒருத்தி. அவளேக் கண்டான் ஒர் இளஞன். எங்கே? வெறியாட்டு நடைபெறும் இடத்திற்கு அருகே. நீர்த் துறையிலே அவள் முன் கை பற்றினன்.

வெறியாட்டு நடைபெறும் இடம் எப்படியிருக்கிறது? மணலிலே

புன்க மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அது எத்தகைய தோற் றம் அளிக்கிறது ? செந்நெல் வெண் பொரி தூவியதுபோல் இருக்கிறது.

அத்தகைய வெறியாட்டுக் களம் மலிந்த ஊர் அது. அந்த ஊரிலே நீர்த்துறையிலே அவளேச் சந்தித்தான்.

பெண்ணே ! இனி உன்னைக் கை விடேன்’ என்றான்.

“வரைந்து செல்’ என்றாள்.

‘வருவேன்’ என்றான்.

‘விரைந்து வா’ என்றாள்.

“சத்தியம்’ என்று கூறினன்.

பிறகு நாட்கள் பல சென்றன. அவன் வரவில்லை. அவள் வருந்தினுள்.

கண்டாள் தோழி. அவனிடம் சென்றாள். சத்தியம் செய்தாய்; அதன்படி கட விரைவாக” என்றாள்.

எம் அனங்கினவே . மகிழ்ந முன்றில் க்னே முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்