பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கு று ங் .ெ த ைக க்

5. சொல்லும் செயலும்

“எங்கே அவர் ? வரக்காணுேமே!’ ‘யார்? உன் காதலன் தானே!’

& 4 * 3.3

ஆம் ‘வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன்’

‘போடி நீ! இப்படித்தான? ஏன் வர வேண்டாம் என்றாய்? முன்பு பகலில் வந்து கொண்டிருந்தார். பகலில் வராதே, இர வில் வா என்றாய்”. இப்போது இரவிலும் வராதே’ என்று சொல்லி விட்டாய். நான் என்ன செய்வேன் ?”

“இதோ! பார்! வருந்தாதே என்மீது கோபியாதே. கான் சொல்வதைச் சிறிது கேள்’

சொல்லு’

  • தினப்புனத்திலே உன்னைக் கண்டான். இன்புறவேண் டும் என்றான். சரி என்றாேம். இடம் கொடுத்தோம். மறு நாளும் வந்தான். மறுநாளும் வந்தான். இப்படியாகத் தொடர்ந்து வந்தான் பகலிலே. அதற்கும் உடன் பட்டோம். பிறகு இரவு வருகிறேன்’ என்றான். வா’ என்றாேம். இப்படிப் போய்க் கொண்டே யிருந்தால் லேசாகப் போய்விடாதா? உனது அருமை தெரியுமா? கலியாணத்துக்கு ஏற்பாடு செய்யாமல் அவன் வந்து போய்க் கொண்டே யிருப்பான். இப்படி ஒருதடை விதிக்க வேண்டும். சூழ்ச்சி செய்ய வேண்டும். அப்போதுதான் அவன் கலியாணத்தில் கருத்தைச் செலுத்துவான். வருந்தாதே.”

மகிழ்நன் மார்பே வெய்யையால் :ே அழியல் வாழி - தோழி! - நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய, ஒன்று மொழிக் கோசர் போல, வன் கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

6TT