பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 கு று க் .ெ த ைக க்

364. வருவாராளுல் வரச்சொல்லு’

மீனவர் குல மங்கை: மீனவன் ஒருவன் மீது காதல் கொண் டாள். அவனும் அவளேக் காதலித்தான். களவு நடக்கிறது. இப்படிப் பல நாள். ஒரு சமயம் என்ன ஆயிற்று ?

அவளது தகப்பனர் வீட்டிலே தங்கி விட்டார். மீன் பிடிக்கப் போகவில்லை. காரணம் என்ன ? சுரு மீன் எறிந்தது. மார்பிலே காயம். தகப்பனருக்கு உதவி செய்வதற்காகத் தாயாரும் வீட் டிலே தங்கி விட்டாள். அப்போது அவளது காதலன் வந்த்ான். சமயம் சரியாயில்லே. போய் விட்டான். மறுநாள் வந்தான். அப்போதும் அப்படியே. இப்படியாகத் தொடர்ந்து சில நாட்கள்.

தகப்பனருக்கு உடம்பு சரியாய் விட்டது. வலையை எடுத் துக் கொண்டார் மீன் பிடிக்கப் போய் விட்டார். தாயும் உப்பை எடுத்துக் கொண்டாள். விற்று வரப் போய் விட்டாள். இந்த நேரத்திலே வந்தான் காதலன். இவ்வளவு நாள் வந்து ஏமாந் தான் அல்லவா ? இன்றும் எங்கே அந்த எண்ணத்திலே போய் விடுகிருனே என்ற பயம் அவளுக்கு. வா’ என்று அழைத் தலும் கூடாது. ஆல்ை அவனுக்கு விஷயம் தெரிய வேண்டும்.

“அப்பா மீன் பிடிக்கப் போய் விட்டார். அம்மா உப்பு விற் கப் போனள். வீட்டிலே எவருமில்லை. இப்போது வந்தால் எளிது. இதை அவருக்குச் சொல்வார் இல்லையே!’ என்றாள்.

சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே கன்றுமன் தில்ல - வயச் சுரு எறிந்த புண் தணிந்து, எங்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனல், பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு, ‘இனி வரின் எளியள்’ என்னும் தாதே.

-கல்லாடனர்