பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கு று ங் தொ ைக க்

புள்ளும் புலம்பின ; பூவும் கூம்பின ; கானலும் புலம்பு கனி உடைத்தே; வானமும், நம்மே போலும் மம்மர்த்து ஆகி, எல்லே கழியப் புல்லென்றன்றே; இன்னும் உளெனே - தோழி ! . இக் கிலே தண்ணிய கமழும் ஞாழல் தண்ணம் துறைவற்கு உரைக்குங்ர்ப் பெறினே.

-பெருங்கண்ணன்

383. வம்பு ஒயுமா?

“ஊரிலே தலை காட்ட முடியவில்லை. ஒரே வம்பு அவருடைய தேரை நான் பார்க்கிறேனே இல்லையோ? ஆனல் சோலே யிலே மலர் கொய்யும் தோழியர் எல்லாரும் பார்க்கின்றனர். பாகன் தடுத்து நிறுத்தவும் கில்லாது ஒடுகிறது தேர். அப்புறம் எப்படி வம்பு பேசாதிருப்பார்கள்?’ என்றாள் அவள். காதலன் காதிலே கேட்க, கருத்தென்ன ? கலியாணம் செய்யவேண்டும் என்பதே.

அலர் யாங்கு ஒழிவ - தோழி ! - பெருங் கடல் புலவு காறு அகன் துறை வலவன் தாங்கவும், நில்லாது கழிந்த கல்லென் கடுங் தேர் யான் கண்டன்றாேஇலனே ; பாள்ை ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் தாது சேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே ?

-சேந்தன்கீரன்

383. முடிச்சு அவிழ்க்க முடியாது !

களவு இன்பம். கடந்து கொண்டே யிருக்கிறது. எவ்வளவு நாள் ? தோழிக்கு அலுப்பு!

“கொஞ்சம்கூட இரக்கமில்லையே அவருக்கு” என்றாள்.