பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கு று ங் தொ ைக க்

செம்புலப் பெய் நீரார்

செம்புலப் பெய் நீர் போல’ என்று குறிப்பிடு கிறார் இவர் தமது பாடல் ஒன்றிலே. எதை ? காதலர் தம் உள்ளக் கலப்பினை. எனவே இவரும் செம்புலப் பெய் நீரார் என வழங்கப் பெற்றார்,

செய்தி வள்ளுவன் பெரும் சாத்தனர்

வள்ளுவர் எவர் ? அரசாங்கத்துக்குச் செய்தி அறி விப்போர். சாத்தனர் என்பது இவரது இயற் பெயர். அரசாங்கத்துக்குச் செய்தி அறிவிப்பவராக இருந்தார். எனவே, செய்தி வள்ளுவன் சாத்தனர் என அழைக்கப் பெற்றார்.

சேந்தம் பூதனர்

சேந்தன் என்பவரது மகனர் சேந்தம் பூதனர்.

தங்கால் முடக் கொல்லஞர்

தங்கால் என்பது பாண்டிய நாட்டில் உள்ளதோர் ஊர். திருத்தண்கால் என வழங்கப்படுவது. இவ்வூரைச் சேர்ந்தவர் இவர். முடவர்; கொல்லர்.

தீன்மதி நாகனர்

தீமிதி நாகனர் என்றும் சொல்வார் உளர். தீ மிதிப் பதிலே புகழ் பெற்றிருக்கக் கூடும் அல்லவா ?

நாகம் போத்தனர்

போத்தன், போத்தி என்பன குடிப்பெயர். போத்தனூர் என்ற பெயர் காண்க.