பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கு று க் .ெ த ைக க்

‘சரி. இனிமேல் ஜாக்கிரதையாக வரவேண்டும். ஊர் காவலர் கண்ணில் பட்டுவிடக் கூடாது. பட்டு விட்டால் பிடித் துக்கொண்டு விடுவார்கள். நாய் கண்டு விட்டால் குரைக்கும். ஊரார் விழித்துக்கொண்டு விடுவார்கள். எனவே, காவலரும், காயும் காணு வகையில் போகவேண்டும்’ என்று முடிவு செய்து கொள்வான்.

மறுநாள் வருவான். ஊர்காவலர் கண்ணில் பட்ாமல் வரு வான் ; நாய் காணு வகையில் வருவான். வந்து காதலியின வீட் டுப் பக்கமாக இருப்பான். வருவாளோ வருவாளோ’ என்று எண்ணி.

நிலவு வந்துவிடும். கிலவு வந்து விட்டால் அவள் வெளியே வருவாளா? வரமாட்டாள். ஏன் ? களவு வெளிப் பட்டுவிடும். களவுக்கு நிலவு துணை செய்யுமா ? எனவே, நிலவை கிந்தித்துக் கொண்டு போய் விடுவான் அவன்.

இப்போது எதிரிகள் மூன்று பேர். ஊர்காவலர், நாய் நிலவு.

‘இந்த மூன்று எதிரிகளையும் வெற்றி கண்டு புறமுதுகிடச் செய்தே காதலியைக் காணவேண்டும். எனவே, இப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் ” என்று உறுதி கொள்வான் அவன்.

மறுநாள் வருவான். முதல் மூன்று எதிரிகளையும் வெற்றி கண்டு வருவான். வந்து என்ன செய்வான்?

“வந்து விட்டேன்; காத்திருக்கிறேன்’ என்று தந்தி கொடுப் பான். யாருக்கு? காதலிக்கு, தந்தி கொடுப்பது எப்படி? கொல் லேயிலே தென்னேமரம் இருக்கும். அதன்மீது ஏறுவான். ஒரு தேங்காயைப் பறித்துத் தள்ளுவான். அது கிணற்றிலே விழும். ‘டொம் என்று சப்தம் செய்யும். இதுதான் தந்தி.

‘வந்து விட்டானே; வந்து விட்டானே’ என்று காத்திருப் பாள் அவள்; தூங்காமல் விழித்திருப்பாள். தந்தி கேட்கும். “டொம் என்ற சப்தம் கேட்பாள். கேட்ட உடனே மெதுவாக எழுந்து வெளியே வருவாள்.