பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங் தெ ைக க் 65

‘போம்மா ! உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கு’’ என்றாள்.

‘ஏன்?’ என்று கேட்டாள் செவிலி.

‘என்னவோ பிரமாதமான ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். அந்தக் குறிகாரிக்கும் தெரியவில்லை. அவள் தெய்வத்துக்கும் தெரியவில்லை’

“என்ன தெரியவில்லே?”

‘ஒன்றும் தெரியவில்லை’

‘கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லேன்’

‘உன் பெண்ணுக்கு வந்திருக்கிற நோய் இது என்று”

‘'எது? நீ தான் சொல்லேன்!’

‘அந்த ஆண் குரங்கைக் கேள்’’

‘எந்த ஆண் குரங்கு?’’

‘குட்டியுடன் விளையாடும் ஆண் குரங்கு?’’

‘அதுக்கு எப்படியடி தெரியும்?”

‘அதுதான் பார்த்துக் கொண்டிருந்ததே!’

எதை?’’

‘உன்.பெண்...... ஒருவனுடன்......காதல்....செய்ததை” ‘ஒகோ! அப்படியா சங்கதி!’ - “ஆமாம்!”

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை மேக்கு எழு பெரும் சினே இருந்த தோகை, பூக் கொய் மகளிரில் தோன்றும் நாடன் தகான் போலத் தான்தீது மொழியினும், தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே; தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர்வாய் வரையாடும் வன் பறழ் தங்தைக் கடுவனும் அறியும் அக் கொடியோனேயே.

-கொல்லன் அழிசி

39. குறத்தியினும் குறத்தி

அவனும் காதலித்தான். அவளும் காதலித்தாள். இரு வரும் இன்பமாக இருந்தனர். திருட்டு ஒழுக்கம்தான். சிலநாள்

5