பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கு று ங் .ெ த ா ைக க்

50. குரங்கு முறித்த கொம்பு

கொல்லப்புறத்திலே சலசல என்று சப்தம் கேட்டது. மரக்கிளேகளே உலுக்கிய சப்தம்.

“சரி. நமது காதலன் வந்து விட்டான்’ என்று எண்ணி ள்ை அவள். எழுந்து வந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். எங் கும் காணுேம். எவரையும் காணுேம். ஒரே இருட்டு. மரக்கிளே யிலே இரண்டு பறவைகள் மாத்திரம் சப்தம் செய்துகொண்டிருந் தன. கண்டாள். திரும்பிவிட்டாள்.

சிறிதுநேரம் சென்றது. மறுபடியும் அதே மாதிரி சப்தம் கேட் டது. சரிதான். பறவைதான் சப்தம் செய்கிறது’ என்று எண் ணரினுள் அவள். எழுந்து போகவில்லை.

‘ஏனடி, போகவில்லையா? காதலர் வந்துவிட்டாரே!’ என்றாள் தோழி.

அவளுக்குக் கோபம் ஏமாற்றத்தால் ஏற்பட்டது. காதலன் சரியான முறையில் அறிவிக்கவில்லையே என்று. போடி! பொய் சொல்லாதே!’ என்றாள். ‘இல்லை. மெய்தான்’ என்றாள் தோழி. ‘குரங்கு என்ன செய்தது? மரக்கிளே ஒன்றின் மீது தாவியது குட்டியுடன் தாவியது. இளங்கிளே. மெல்லிய கிளே. குரங்கு சரி யாகக் குறிவைத்துத் தாண்டவில்லை. எனவே முறிந்து போயிற்று” என்றாள். ‘அந்த மாதிரி?” “என் மனம் முறிந்தது.”

மெய்யே, வாழி? - தோழி - சாரல் மைப் பட்டன்ன மா முக முசுக்கலே ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகியாங்கு, நாடன் தான் குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன, என் தட மென் தோளே. 13

-கபிலர்