பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அன்றைய தமிழனே இன்றைய தமிழனுக்கு அறிமுகம் செய் விக்க முயல்கிறேன்; மனித உள்ளத்தை எடுத்துக் காட்ட முயல்கிறேன். எனது முயற்சியில் எவ்வளவுதூரம் வெற்றி பெற்றுள்ளேனே அறியேன்.

நான் எல்லாம் அறிந்தவன் அல்லன் ; குறைகள் உடைய வனே. எனது குறைகளே யான் அறிவேன்.

ஆயினும் புதுமை காண விரும்புகிறேன். புரட்சிக் கருத்து கனத் துவ விரும்புகிறேன், கடந்து கடந்து தேய்ந்துபோன வழியை விட்டுப் புதிய வழியிலே செல்ல விரும்புகிறேன்.

இக் கருத்துடனேயே, ‘கலித்தொகைக்கு விளக்கம் எழுதி னேன். தமிழ் மக்கள் என்னேப் பாராட்டினர்கள்; ஆதரவு தந்தார்கள் ; உற்சாகமூட்டினர்கள்.

அந்த ஆதரவும், ஊக்கமும், உற்சாகமும் என்னேத் தூண்டின. குறுந்தொகைக்கும் விளக்கம் எழுதச் செய்தன. எழுதியிருக்கிறேன்.

குற்றங் குறைகளை மன்னிக்க வேண்டுகிறேன்.

இந்நூலே நன்முறையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார் எனது உழுவலன்பர் திரு. முல்லே முத்தையா. அவர் என்மீது கொண்டுள்ள அன்பு எல்லேயற்றது; ஆழமானது. அவர்தம் அன் புக்கு என்ன கைம்மாறு செய்யவல்லேன். நன்றி ; நன்றி. வாழ்க முத்தையா வெல்க முத்தையா! வெற்றிவேல்.

-சக்திதாசன் சுப்பிரமணியன்